![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsKQ6npWBI0PGI78Q-H_S9eH695eo8sk55iysPku0zEeaLtkYESIXNaePEyTyW2G6rBjkTDrf9eYPSVU17msifjb1QOPZ8HEUrPk010m_zeGowMqdC8K-XFSHdw-H1P0jQwyJryr9mg4bR2B8a_ODfUgz7GY0zfgIuOzfUCG3PoI5rdPGjX3itquo5/s16000/rfer.jpg)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர்கள் உட்பட கூட்டணியின் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 12 பேருக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்கி நிலையான அமைச்சரவையை நியமிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் இம்மாத காலத்துக்குள் இராஜாங்க அமைச்சையும்,நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ச்சியாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்க்ஷ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க, பவித்ரா வன்னியராட்சி, ஜனக பண்டார தென்னகோன், எஸ்.பி. திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளடங்கலாக 10 பெயரை பொதுஜன பெரதுன அமைச்சரவை அமைச்சுக்காக பரிந்துரைத்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் ஆகியோருக்கும் நிலையான அமைச்சரவையில் அமைச்சு பதவிகள் கிடைக்கப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.