இதன்படி, ஜனாதிபதி நிதியமைச்சரின் கீழ் இருந்த முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் போர்ட் சிட்டி ஆணைக்குழு ஆகியவை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் நேற்று (16) வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், முதலீட்டு ஊக்குவிப்புக்காக அமைச்சர் எவரும் நியமிக்கப்படாததால், அந்த அமைச்சு தொடர்ந்தும் ஜனாதிபதியின் கீழ் இயங்குகிறது. (யாழ் நியூஸ்)