பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், அதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோரியுள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்தப் பதவியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இது தொடர்பில் அறிவிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அதன்படி திரு.பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து அந்த தகவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)