
இந்தியா எப்படி தகுதி பெற முடியும்?
- ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்.
- இந்தியா ஆப்கானிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்.
- இலங்கை பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், இலங்கை மூன்று வெற்றிகளுடன் தகுதி பெறுவதோடு மற்றைய அனைத்து அணிகளும் ஒரு வெற்றியுடன் முடிவடையும்.
இந்த சூழ்நிலையில் அதிக நிகர ரன் ரேட் கொண்ட அணி தகுதி பெறலாம்.
இலங்கை ஏன் இன்னும் தகுதி பெறவில்லை?
இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது, ஆனால் பாகிஸ்தான் அவர்களை தோற்கடித்தால் இலங்கை போட்டியிலிருந்து வெளியேறும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன.
இலங்கை போட்டியில் இருந்து வெளியேற
- ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்
- ஆப்கானிஸ்தான் இந்தியாவை வீழ்த்த வேண்டும்
- பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்த வேண்டும்
இந்த சூழ்நிலையில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெறுவதோடு, அதிக ஓட்ட விகிதத்தைக் கொண்ட இரு அணிகளும் தகுதி பெறும். (யாழ் நியூஸ்)