மின் பாவனையாளர்களுக்கு திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் தொடர்பில் விளக்கத்தினை பெற்றுக்கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் குறித்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 077 56 87 387 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி புதிய மின் கட்டணம் தொடர்பிலான முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 30(2) உ பிரிவிற்கு அமைய மின்சார கட்டணங்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.