கொழும்பு தாமரைக் கோபுரத்தின் சில பகுதிகள் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதன் மூலம் 1 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். முதல் நாளில் ரூ. 1.5 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
கொழும்பு தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நாளில் 2612 உள்ளூர் மக்களும் 21 வெளிநாட்டு பிரஜைகளும் வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று திறக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரம் வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் மதியம் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும். (யாழ் நியூஸ்)