கடந்த 16 ஆம் திகதி காணாமற் சென்ற பேராதனை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் அஞ்சனா குலதுங்க எனும் மாணவனின் சடலம், மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கன்னோருவ பிரதேசத்திற்கு அருகில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் அவர் தங்கியிருந்த அறையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)