இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டங்களை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுக்கும் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, பல்வேறு அபிவிருத்தி முகவர் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் மின்சாரத் துறையின் பங்குதாரர்களுடன் இந்தக் குழு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மறுசீரமைப்பு முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)