வியாழன் முதல் அதிக நேரம் மின்வெட்டு செய்யுமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை ஆணைக்குழு ஏற்க மறுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“சரியான காரணங்களுடன் மின்வெட்டை நீட்டிப்பதை இலங்கை மின்சார சபை நியாயப்படுத்தாததால் நாளை முதல் நீண்ட மின்வெட்டுக்கான (2 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள்) கோரிக்கையை PUCSL ஏற்க மறுத்துவிட்டது.
எனவே 1 மணித்தியாலம் மற்றும் 20 நிமிட மின்வெட்டு தொடர்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். (யாழ் நியூஸ்)