பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஊருக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நபரை வெறிச்சோடிய பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)