திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் இது தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அபிளாட்டோக்ஸின் அடங்கியிருப்பதாக பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்ட திரிபோஷா பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சிகிச்சை சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திரிபோஷாவை பயன்படுத்த முடியும் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
3 மாதங்களுக்கு முன்னர் திரிபோஷா நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட திரிபோஷாவில் அபிளாட்டோக்ஸின் அளவு கூடுதலாக இருந்தமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அபிளாட்டோக்ஸின் இருந்ததாக உறுதி செய்யப்பட்ட திரிபோஷா தற்பொழுது அழிக்ககப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மற்றும் திரிபோஷா நிறுவனம் உறுதி செய்துள்ளன.