இந்த கட்டண உயர்வு எதிர்வரும் 5 முதல் அமலுக்கு வரும் என TRCSL தெரிவித்துள்ளது.
இதன் மூலம், மொபைல், ஃபிக்ஸட் (Fixed- நிலையான), பிராட்பேண்ட் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள் 20% அதிகரிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அனைத்து பே டிவி (Pay TV) கட்டணங்களும் 25% அதிகரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க டொலர் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக TRCSL மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)