தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் காணப்பட்ட பந்துல என்ற யானை இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு முறை சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிருகக்காட்சிசாலையில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி யானை உயிரிழந்தது.
இறக்கும் போது யானைக்கு 79 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)