கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதல் 3 நாட்களில் சுமார் 14,000 பேர் கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் கோபுரத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமும் நேற்று (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, பொதுமக்கள் இப்போது மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம், இருப்பினும், டிக்கெட்டுகள் இரவு 10:00 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)