![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_you3pYNRBQLGk_-EqMS_CU_HHV6qns-EHkyamglwaQPduAFC9EhVi2PvLpregE5w_sOWNJBPeOQn2_iGzfN89TcJEbiqllHhEO-RwpgA04GMzLlVkxXPujXsAX3j6rCGUKdhFa50OKb2X-9RiJcH_ZBYFC9OYNeLSDWkUfDDr4ZAD9FSnvQgvhG1wQ/s16000/73EFEACF-8013-4849-8822-7EC30363252B.jpeg)
நாட்டின் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழிலை பாதுகாப்பதற்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோழிப்பண்ணை கைத்தொழில் சங்கத்துடன் இன்று (12) நடத்திய கலந்துரையாடலில் இவைகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இலங்கையில் முட்டை உற்பத்தி 164 மில்லியனாகவும், கோழி இறைச்சி உற்பத்தி 18 மெட்ரிக் தொன்னாகவும் குறைந்துள்ளதாக கோழிப்பண்ணை தொழில்துறையினர் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கால்நடை தீவனத்தின் விலை அதிகரிப்பு மற்றும் இரசாயன உரங்களுக்கு தடை, 2021 உயர் பருவத்தில் இலங்கையில் சோள உற்பத்தி 90,000 மெற்றிக் தொன்களாக குறைவடைந்தமையால் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஒரு பகுதியை கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை பரிசீலித்த விவசாய அமைச்சர், விவசாய அமைச்சின் செயலாளர் தலைமையில், கோழி மற்றும் முட்டை உற்பத்தி கைத்தொழிலை பாதுகாப்பதற்கான கூட்டு பணி ஆணையை உடனடியாக அமைக்குமாறு அமைச்சின் செயலாளர் திரு.ரோஹன புஸ்பகுமாரவிற்கு பணிப்புரை விடுத்தார். (யாழ் நியூஸ்)