இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலப்பகுதியில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு, தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின்பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிட முடியும்.
அவ்வாறே, வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.