இரத்மலானை, பெலெக் கடே சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஆயுதம் ஏந்திய இருவரினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், 1,158,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)