தொலைபேசி சேவை கட்டணங்கள் 20% அதிகரிப்பு இன்று (05) முதல் அமுலுக்கு வரும்.
முன்னர் இருந்த அட்டைகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முந்தைய ரூ.49 கார்ட் புதிய கட்டண திருத்தத்தின்படி ரூ.59 ஆகவும், ரூ.99 கார்டின் விலை ரூ.119 ஆகவும் இருக்கும்.
இதற்கு முன்பு போல் ரூ. 49 மற்றும் ரூ. 99 ரீலோட் செய்தால், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தரவுகள் மற்றும் பொதிகள் (டேட்டா பெக்கேஜ்) இயங்காது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)