ஓய்வூதியம் பெற தகுதியான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்கள் வரை ஊதிய விதுப்பற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக செப்டெம்பர் மாதம் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதையடுத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஊதியம் இல்லாத விடுமுறையைப் பெற முடியும்.
சுற்றறிக்கையின்படி, விடுமுறையால் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணிமூப்பு பாதிக்கப்படாது. (யாழ் நியூஸ்)