நாட்டின் பொருளாதார நெருக்கடியை போக்க நாட்டைப் பொறுப்பேற்ற தலைவருக்கு கட்சி நிற அரசியலின்றி ஆதரவளித்தால் ஆறுமாத காலத்துக்குள் நாட்டின் பொருளாதாரம் சீராகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (04) நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, நாட்டின் ஜனாதிபதியாக இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலமே பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ அனுபவச் செல்வம் கொண்ட தலைவர்; அவரிடம் இருந்து அந்த அனுபவங்களைப் பெறுவதற்கு தான் தீவிர அரசியலில் ஈடுபட்டு அடுத்த தலைமுறைக்கு அந்த அனுபவங்களை வழங்க வேண்டும் என அனுராத ஜயரத்ன கூறுகின்றார்.
எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து முழு நாட்டு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், இது குறுகிய காலப் பிரச்சினையே எனவும் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)