இளம் பிக்குகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சந்தேக நபரான பிக்குவை எதிர்வரும் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
எம்.எப்.எம்.பஸீர், பாறுக் ஷிஹான்