அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி சரித்திர வெற்றி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி சரித்திர வெற்றி!

அசுர பலத்தை கொண்ட ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் 2 போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித், ஃபிஞ்ச், ஹாசல்வுட், ஸ்டார்க் என அசுர பலமான வீரர்கள் இருந்தனர். எனினும் அவர்களால் ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 5 ரன்களுக்கும், ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்னுக்கும் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

இதன்பின்னர் வந்த அலெக்ஸ் கேரி (4), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (4), மேக்ஸ்வெல் (19), ஆஸ்டன் ஆகர் (0) என அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றினர். மறுமுணையில் தூண் போன்று நின்ற வார்னர் மட்டும் 94 ரன்கள் அடித்து வந்தார். ஆனால் அவராலும் சதம் அடிக்க முடியவில்லை. இதனால் 31 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது

குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு நிதானமான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் கைடானோ (19), மருமானி (35) ரன்கள் அடித்து அடித்தளம் அமைத்தனர். எனினும் மிடில் ஆர்டர் வீரர்கள் ஏமாற்றியதால் அந்த அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் ஜிம்பாப்வே தோற்றுவிடும் என்றே ரசிகர்கள் நினைத்தனர்

ஆனால் அதனை மாற்றி அமைத்தார் கேப்டன் ரேகிஸ் சகாப்வா நிதானமாக ஸ்கோரை உயர்த்தினார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுணையில் பொறுப்புடன் விளையாடிய அவர் 72 பந்துகளில் 37 ரன்களை அடித்தார். இதனால் 39 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே ஜிம்பாப்வே வீழ்த்தியுள்ளது. ஐசிசி தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள ஜிம்பாப்வே, 5 முறை உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேவின் முன்னணி வீரர்கள் காயத்தினால் இந்த போட்டியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.