கல்முனையைச் சேர்ந்த மாணவி சைசூன் தரம் 9தில் கல்வி கற்றுக் கொண்டு இருக்கும் போது தனது கண்பார்வையினை முழுமையாக இழந்த நிலையில் அதனை ஒரு சவாலாக கொண்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கலை வர்த்தக பிரிவில் கல்வி கற்று பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரபீடத்தின் ஆங்கில மொழித்துறையில் முதற்தரத்தில் சித்தியடைந்த மாணவி அப்துல் சலீம் சைசூன் தற்போது பொதுநலவாய நாடுகளுக்கான உதவித்தொகை பெற்று பிரித்தானியாவிலுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பைத் தொடர்வதற்காகச் சொல்லவுள்ளார்.
இம்மாணவி தான் கல்வி கற்ற காலத்தில் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். சைசூன் சவால்களை முறியடிப்பதிலும் தன்னுடைய தூர நோக்கில் பயணிப்பத்திலும் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும் பல தடைகளை தாண்டி தன்னுடைய சக்திக்கு அப்பாலும் சில விடயங்களை செய்து சாதிகக முடியும் என்பதனை நிரூபித்து காட்டியவர்.
குறித்த மாணவியின் அபரிநிதமான முன்னேற்றத்தை கௌரவித்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அண்மையில் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.

யாழ் நியூசிற்காக சர்ஜுன் லாபீர்