கம்பஹா - யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது மகிழுந்து சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்தினால் மோதப்பட்ட மகிழுந்து தொடருந்து நிலைய மேடை வரை இழுத்துவரப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)