அமெரிக்கா - லாஸ் ஏஞ்சல்ஸ் சந்திப்பில் ஏற்பட்ட வாகன விபத்தில் தீ பற்றியதில் ஒரு கர்ப்பிணிப் பெண், கருவில் இருந்த குழந்தை மற்றும் 1 வயது ஆண் குழந்தை உட்பட குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, மெர்சிடிஸ் காரை ஓட்டும் ஒரு பெண் போக்குவரத்து சமிக்ஞை விளக்கை மீறி பல கார்களில் மோதி விபத்துக்குள்ளாக்கினர்.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஓட்டுநர் உயிர் தப்பினார்.
அவர் தனது காதலனுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் குறித்த வண்டியை செலுத்தியதாகவும், வேகமாக செல்வதற்கு முன்பு மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)