2008 ஆம் ஆண்டு வெலிவேரியவில் வெடிகுண்டு வெடித்து திரு.ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி திரு.சஹான் மாபா பண்டார இன்று (01) உத்தரவிட்டார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் மற்றும் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஷ்மன் குரே ஆகிய இரு சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 6, 2008 அன்று, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேரைக் கொலை செய்தமை மற்றும் வெலிவேரிய மைதானத்திற்கு அருகில் தற்கொலை குண்டுதாரி மூலம் 84 பேரைக் கொல்ல சதி செய்ததாக 31 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. (யாழ் நியூஸ்)