ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சபையை நியமிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேசிய சபையை நியமித்திருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பேரவையை முதலில் நியமித்து அதன் பின்னர் கலந்துரையாடி உரிய நியமனங்களை செய்திருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பெரிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர், ஜனாதிபதி தேசிய சபையொன்றை அமைக்கவுள்ளதாகவும், அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு தங்களால் பங்களிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.