கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை விசேட சொகுசு சுற்றுலா புகையிரதத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் இந்த புகையிரதம் இயக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய சுற்றுலா புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும், புகையிரதம் கண்டியை காலை 9.18 மணிக்கு வந்தடையும், கண்டியில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் புகையிரதம் இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
தலதா மாளிகை மற்றும் பேராதனை தாவரவியற் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த விசேட புகையிரதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1st Class : ரூ. 2000
2nd Class : ரூ. 1500
(யாழ் நியூஸ்)