அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கான நீர் கட்டண நிலுவையை இரண்டு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டணத்தை செலுத்த தவறுபவர்களுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்குமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சபாநாயகர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நீர்கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரப் பட்டியலையும் தமக்கு வழங்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தியதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
4,400 மில்லியன் ரூபா நீர் கட்டண நிலுவை நாடளாவிய ரீதியாக உள்ள மக்களிடம் இருந்து அறவிட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து 10 மில்லியன் ரூபா நீர் கட்டண நிலுவை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.