சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மேலதிக கடன் வசதிகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமானது மிகவும் நடைமுறை மற்றும் செயலூக்கமான கொள்கை நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)