உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானி இரண்டாவது இடத்துக்கு இன்று முன்னேறினார்.
60 வயதான கௌதம் அதானி சில வாரங்களுக்கு முன்னர் அப்பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் உள்ளிட்டபங்குகளின் பெறுமதி பங்குச் சந்தையில் வெகுவாக உயர்ந்தது. இதனால் அதானியின் சொத்து மதிப்பு 155.7 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.
இதனால் போர்ப்ஸ் சஞ்சிகையின் செல்வந்தர்களின் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
அமெரிக்காவின் இலோன் மஸ்க் இப்பட்டியிலில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 273.5 பில்லியன் டொலர்கள் ஆகும்.
புpரான்ஸின் பேர்னார்ட் ஆர்னோல்ட் மூன்றாவது இடத்திலும் அமெரிக்காவின் ஜெப் பெசோஸ் நான்காவது இடத்திலும் இருந்தனர்.