காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் தேசிய கராத்தே அணி நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடத்த இலங்கையின் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த இலங்கை கராத்தே-தோ அணியினரிடம் ஹீத்ரோ விமான நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அணி உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களின் கோரிக்கையின் பேரில், இது தொடர்பாக தேசிய விளையாட்டு கவுன்சிலுடன் கூட்டம் நடைபெற்றது.
மூன்றாம் தரப்பினருக்கும் தற்போதைய கராத்தே டூ பெடரேஷனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய விளையாட்டு சங்கத்தின் உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக விளையாட்டு வீரர்களின் பங்கேற்பை வெளிப்புற குழு எதிர்த்துள்ளதோடு, விளையாட்டு வீரர்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.
இதுபோன்ற செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)