சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், சந்தேகநபரால் திருடப்பட்டதாக நம்பப்படும் பல நூற்றுக்கணக்கான பொருட்களை மீட்டுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த கைக்குண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபரிடம் இருந்து 125 கையடக்கத் தொலைபேசிகள், 10 மடிக்கணினிகள், ஒரு பியானோ, ஒரு கிடார், 520 கழற்றப்பட்ட கைக்கடிகாரங்கள் மற்றும் 3 தொலைக்காட்சிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் இன்று மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)