ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பதொன்று தற்போது கிடையாது.பெயர்ப்பலகை மாத்திரமே அங்குள்ளது. கட்சியின் கொள்கை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் கட்சியின் யாப்பை திருத்தம் செய்துள்ளார்,அது பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்- பைத்தியம்!
கேள்வி – அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கா கட்சி யாப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது?
பதில் – ஆம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ஒன்று தற்போது இல்லை,பைத்தியக்காரர்கள் மாத்திரமே உள்ளார்கள். இன்று கட்சி இல்லை,கட்சியின் கொள்கையும் அங்கு இல்லை என்றார்.
-இராஜதுரை ஹஷான்