பதுளை ஹிங்குருகமுவ பிரதேசத்தில் 83 வயதுடைய பெண் ஒருவரும் அவரது மகளும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வயதான பெண்மணி அவரது 55 மற்றும் 62 வயதுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
இன்று (10) காலை இரு பெண்களும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் இருந்து தப்பிய மற்றைய மகள் படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)