போராட்டங்கள் மூலம் தலைவர்களை உருவாக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அவர், தேர்தலின் மூலம்தான் நாட்டின் தலைவர்கள் உருவாகிறார்கள் என்றார்.
கலவரங்கள் அழிவை ஏற்படுத்துவதாகவும், அதனை கிழக்கு மாகாண மக்கள் அனுபவித்துள்ளதாகவும், ஆனால் தென்னிலங்கை இளைஞர்களுக்கு அவ்வாறான அனுபவம் ஏற்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
13 மணித்தியாலங்கள் மின்சாரம் இன்மை சிலருக்குப் போராட்டமாக இருந்தாலும் கிழக்கு மாகாண மக்கள் நிலத்துடனும் கடலுடனும் வாழ முடியாமல் திணறி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தான் உட்பட இவ்வாறு துன்புறும் மக்களின் போராட்டத்தை வென்றெடுக்கும் வலுவான ஜனநாயக அரசை நிறுவுவதற்கு முயற்சி செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)