நாட்டில் எதிர்வரும் இரு தினங்களில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை (12) நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ள மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், கொழும்பு முன்னுரிமை வலையங்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.