இன்று (22) அல்லது நாளை (23) நிலக்கரி இருப்புக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 8 மணி முதல் 10 மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் 28ம் திகதி வரை நிலக்கரி இருப்பு இருப்பதாகவும், 28ம் திகதிக்க்ய் பிறகு நிலக்கரி கிடைக்காவிட்டால் மூன்று மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் 820 மெகாவாட் இழப்பு ஏற்படும் என்றும் நிலக்கரி இருப்பு இல்லை என்றால் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், 21 நிலக்கரி கப்பல்களை கொண்டு வருவதற்கு தேவையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை பெற தேவையான பணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அவரிடம் இருந்து நல்ல பதில் கிடைத்ததாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)