நாட்டில் தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு ஒரு மாத காலத்துக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி முற்றாக இழக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் மக்கள் ஒரு பாண் துண்டைச் சென்று வாங்க முடியாத நிலை ஏற்படும் என அதன் தலைவர் திரு.என்.கே.ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உள்ள பிரதான மாவு இறக்குமதி நிறுவனங்கள் தமது மாவு இருப்புக்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மா இறக்குமதியின் காரணமாக 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதனால் கைப்பணத்தினால் மாத்திரமே அதிக மாவுகளை பெற்றுக்கொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மா மூட்டை ஒன்றின் விலை ரூ. 25,000 ஆக அதிகரித்துள்ளதாகவும், அந்த விலையில் மாவை கொள்வனவு செய்து பாண் தயாரித்தால் பாண் ஒன்றின் விலை ரூ. 350 இற்கு அதிகமாகவும், பணிஸ் ஒன்றின் விலை ரூ. 150 இற்கு அதிகமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)