சீனாவிலுள்ள 42 உயரமான கட்டடமொன்று இன்று தீப்பற்றி எரிந்தது.
சாங்ஷா (Changsha) நகரிலுள்ள இக்கட்டடத்தில், சீன அரசின் தொலைதொடர்பு நிறுவனமான ‘சைனா டெலிகொம்’ அலுவலுகமும் உள்ளதாக சீனாவின் சிசிரீவி தெரிவித்துள்ளது.
காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று சீனா டெலிகாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. செல்போன் சேவையில் எந்த இடையூறும் இல்லை என்று அது கூறியது, ஆனால் சமூக ஊடக பயனர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.