பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கிட்டத்தட்ட 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் போலியானவை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய புதிய கட்டண முறையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய முறையின்படி, ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருளின் இருப்புக்கு முந்தைய நாள் இரவு 9:30 மணிக்கு முன் பணம் செலுத்த வேண்டும்.
300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று (05) காலை 10.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் பௌசர் உரிமையாளர்களும் தாமதமின்றி மற்றும் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை விநியோகிக்க உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)