தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, வாகனம் அல்லாத தேவைகளுக்கான QR வசதி செய்யப்பட்டுள்ளது என்பது முதல் அம்சமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
புதிய அம்சத்தின் கீழ், ஜெனரேட்டர்கள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற சாதனங்கள் போன்ற மோட்டார் அல்லாத வகைகளுக்கு எரிபொருளை விநியோகிக்க இது கிடைக்கப்பெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்..
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் பதிவு செய்யும் முறை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
இரண்டாவதாக, எரிபொருள் பரிவர்த்தனை முடிந்ததும் உருவாகும் நிரப்பு நிலையக் குறியீடு எண், குறுஞ்செய்தியில் சேர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.. (யாழ் நியூஸ்)