வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு!!

வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு!!


வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.


கடந்த செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வெறிநாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரது வீட்டில் வீட்டு நாயையும் கடித்துள்ளது. 


அந்த நாய் வெறி நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று செப்டெம்பர் 4, 7 மற்றும் 11 ஆம் திகதிகளில் 3 டோஸ்களைப் பெற்றுள்ளனர்.


மற்றொரு டோஸ் நிலுவையில் இருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், செப்டம்பர் 21 ஆம் திகதி நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, குழந்தை செப்டம்பர் 23ஆம் திகதி இறந்துள்ளது.


Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News