ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும், ஆசிய பசுபிக் ஜப்பான் நிதியத்திலிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமும் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு, வாழ்வாதார மீட்பு, உணவுக்கான அணுகலை பாதுகாப்பதற்கான அவசர உதவிகள், பாதிக்கப்படுபவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.