பாதுக்க - பின்னவல பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் குறித்த சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பாதுக்க பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட 5 இளைஞர்களை பாதுக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருடைய அழைப்பின் பேரில் பாதுக்க வால்கெலே பகுதிக்கு சிறுமி சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த இளைஞனுடன் ஏனைய நால்வரும் இணைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி அவிசாவளை வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.