ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 84 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் டிலான் மதுஷங்க 37 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.