எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான ஒவ்வொரு நபரின் QR குறியீட்டை மற்றுமொருவர் பெற்றுக்கொள்ள முடியாதவாறு பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொள்கிறார்.
சொந்த QR குறியீட்டை ரத்து செய்து புதிய குறியீட்டைப் பெறும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றவர்களுக்கு எரிபொருள் கிடைக்காத வகையில் QR குறியீட்டை வேறு எவருக்கும் காட்டாமல் இருக்குமாறு அமைச்சர் மேலும் கேட்டுக்கொள்கிறார். (யாழ் நியூஸ்)