எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் உரிமக் குறியீட்டை (QR) சரிபார்க்கும் முறையிலிருந்து விலக அபிவிருத்தி சேவை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இப்பணியை நிறைவேற்றுவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் குறியீடுகளை சரிபார்க்கும் முறைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய விவகாரங்களில் தமது அதிகாரிகள் தொழில்ரீதியாக தலையிடுவது தொடர்பில்லாத போதிலும், மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக ஆதரவளிக்கும் அடிப்படையில் தலையிடுவதாக சங்கம் மேலும் குறிப்பிடுகிறது. (யாழ் நியூஸ்)