QR முறைமையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் எரிபொருள் போதாது என அவர் கூறுகிறார்.
இந்த புதிய முறைமைக்காக 11 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் 7.5 இலட்சம் சாரதிகள் முச்சக்கரவண்டி வேலையில் தொழிலாக ஈடுபட்டு வருவதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக முச்சக்கர வண்டிகளை தொழிலாக ஓட்டுபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், முச்சக்கரவண்டி ஓட்டாத 11 இலட்சம் நபர்களை நீக்கிவிட்டு 07 இலட்சம் பேருக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கினால், எமக்கு வாரத்திற்கு குறைந்தது 15 லிட்டர் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெற்றோல் நிலையங்களில் பொலிஸ் பிரிவிற்கு ஏற்ப எரிபொருள் வழங்கப்படுவது அநியாயமான முறை எனவும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் தொழிற்சங்கம் அல்லாத முச்சக்கர வண்டி ஓட்டுனர்களினால் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
எனவே, எரிபொருள் மோசடி அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளையும் பாதிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)