இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) அவசரகால கடன் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (செப்டம்பர் 1ஆம் திகதி) வெளியிடப்படும் எனவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிணை எடுப்புப் பொதியை இலக்காகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் இலங்கை "நல்ல முன்னேற்றம்" அடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்தார்.
“IMF உடனான பேச்சுவார்த்தையில் நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை என்னால் அறிவிக்க முடியும். IMF உடனான ஊழியர் அளவிலான உடன்படிக்கையான முதல் மைல்கல்லை நாம் விரைவில் அடைய முடியும் என்று நம்புகிறோம்" என்று மத்திய வங்கியின் தலைவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார். "IMF உடன் அந்த உடன்பாட்டை எட்டியவுடன், நம் கைகளில் ஒரு நம்பகமான திட்டம் உள்ளது என்றே அர்த்தம்." (யாழ் நியூஸ்)